ஆந்திரா மட்டன் கறி  

தமிழில் ஆந்திரா மட்டன் கறி செய்யும் முறை.

Andhra Mutton Curry Recipe in English

தேவையான பொருட்கள்

 • மட்டன் – 1 /2 கிலோ
 • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
 • பெரிய வெங்காயம்  – 2 (பொடியாக அரிந்தது)
 • தக்காளி – 1 (பொடியாக அரிந்தது)
 • இஞ்சி பூண்டு விழுது  – 1  தேக்கரண்டி
 • மிளகாய் தூள் – 1 /2 தேக்கரண்டி
 • மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
 • கருவேப்பிலை  – 10

அரைக்க

 • வர கொத்தமல்லி  –  1 தேக்கரண்டி
 • சீரகம் – 1  தேக்கரண்டி
 • மிளகு  –  4
 • பட்டை –  1  அங்குலத்துண்டு
 • கிராம்பு  – 2
 • ஏலக்காய்  – 2
 • சோம்பு  – 1 /2  தேக்கரண்டி
 • கசகசா  – 1 தேக்கரண்டி

செய்முறை

 1. மட்டனை  சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி மட்டன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 6  விசில் வரை வேக விடவும்.
 2. மட்டனை வடித்து தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 3. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
 4. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை தாளித்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 5. பின் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், 1 தேக்கரண்டி மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
 6. பின்னர் மட்டன் , தக்காளி சேர்த்து நன்கு  வதக்கவும்.
 7. அரைத்த மசாலா தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் சிறிய தீயில் வைக்கவும்.
 8. மட்டன் வேக வைத்த தண்ணீர் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
 9. குழம்பு திக்ககும் வரை மிதமான தீயில் நன்கு வேக விடவும்.
 10. மீதமுள்ள மிளகுதூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

2 Comments

Trackbacks and Pingbacks

Leave a Reply