சிக்கன் குழம்பு  

எளிய முறையில் சுவையான சிக்கன் குழம்பு  செய்வதற்கான செய்முறை குறிப்பு.

தேவையான பொருட்கள்

 • சிக்கன் – 1 /2 கிலோ
 • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
 • மிளகாய் தூள் – 1 /2 தேக்கரண்டி
 • கொத்தமல்லி தூள் – 1 /2 தேக்கரண்டி
 • சிக்கன் மசாலா – 1 /2 தேக்கரண்டி (விருப்பமெனில்)

அரைக்க

 • சின்ன வெங்காயம்  –  10  (அல்லது)
 • பெரிய வெங்காயம்  –  1
 • இஞ்சி – 1 “
 • பூண்டு  – 7
 • வர கொத்தமல்லி  –  3 தேக்கரண்டி
 • சீரகம் – 1 1 /2 தேக்கரண்டி
 • மிளகு  – 1 தேக்கரண்டி
 • வரமிளகாய்  – 2
 • வெந்தயம்  – 1 /2 தேக்கரண்டி
 • கருவேப்பிலை  – 1  கொத்து
 • பட்டை – 2 “
 • கிராம்பு  – 2
 • சோம்பு  – 1 /2  தேக்கரண்டி
 • தேங்காய் – 4 தேக்கரண்டி

தாளிக்க

 • கடுகு – 1 /2  தேக்கரண்டி
 • தக்காளி – 1 /2

செய்முறை

 1. சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.சிக்கனில் சிறிது மஞ்சள் தூள் கலந்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
 2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 3. வெங்காயம்,இஞ்சி,பூண்டு முதலியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
 4. வதக்கிய பொருட்கள் அனைத்தையும்  நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 5. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து சிக்கனை போட்டு வதக்கவும்.
 6. சிக்கனில் இருந்து வந்த தண்ணீர் வற்றியவுடன் தக்காளி போட்டு வதக்கவும்.
 7. பின் அரைத்த மசாலா, உப்பு  போட்டு  வதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
  தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
 8. சிக்கன் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ஊற்றி 2 நிமிடங்கள் வேக விட்டு இறக்கி வைக்கவும்.

Leave a Reply